ஷா ஆலம், அக் 4: குடியிருப்பு பகுதிகளில் நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களால் வீட்டின் வெளிபுறத்தில் மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு வீட்டு உரிமையாளர்களிடம் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே) கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை.
வெளி ஒப்பந்ததாரர்கள் குடியிருப்பாளர்களிடம் பணம் கேட்பது தொடர்பான புகார்களைப் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி பெற்றுள்ளது.
"எனவே, வீட்டின் முன்புறம் நடைபாதை அமைப்பது போன்ற சேவைகளை வழங்குவதற்காக மக்கள் பணம் செலுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வீட்டிற்கு முன்புறம் சாலை இலவசமாக அமைக்கப்படும்,'' என, எம்.பி.பி.ஜே அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
எம்.பி.பி.ஜே பெயரைப் பயன்படுத்தி பொறுப்பற்ற தரப்பினர் சாலை அமைக்கும் பணிக்காக ஏதேனும் பணம் கேட்டால் பொதுமக்கள் புகார் அளிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
குடியிருப்பாளர்கள் 03-7954 2020 என்ற புகார் எண் மூலமாகவோ அல்லது மேல் நடவடிக்கைக்கு aduan@mbpj.gov.my மின்னஞ்சல் மூலமாகவோ புகார் அளிக்கலாம். அதுமட்டுமில்லாமல், காவல்துறை அல்லது எம்.பி.பி.ஜே புகார் பிரிவவில் நேரடியாகவும் புகார் தெரிவிக்கலாம்.








