SELANGOR

சிலாங்கூரில் விளையாட்டுத் துறை மேம்பாடு குறித்து ராஜா மூடாவுக்கு நஜ்வான் விளக்கமளித்தார்

4 அக்டோபர் 2023, 4:43 AM
சிலாங்கூரில் விளையாட்டுத் துறை மேம்பாடு குறித்து ராஜா மூடாவுக்கு நஜ்வான் விளக்கமளித்தார்

ஷா ஆலம், அக் 4- சிலாங்கூர் மாநில அரசின் இளைஞர் மற்றும்

விளையாட்டுத் துறையின் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பில்

அத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி

மேன்மை தங்கிய சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீருக்கு

விளக்கமளித்தார்.

மாநில இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அதிகாரிகளும் கலந்து

கொண்ட இச்சந்திப்பின் போது இளைஞர்களின் வளர்ச்சிக்கான புதிய

வாய்ப்புகளைக் கண்டறிவது தொடர்பில் ராஜா மூடா வழங்கிய

ஆலோசனைகள் மற்றும் கருத்துகளையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைக்கான நிலைக்குழுவின்

திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து வழங்கப்பட்ட விளக்கங்களை

அக்கறையுடன் கேட்டறிந்ததற்காக ராஜா மூடாவுக்கு தாம் நன்றி

தெரிவித்துக் கொள்வதாக நஜ்வான் சொன்னார்.

மாநிலத்திலுள்ள இளைஞர்கள், விளையாட்டாளர்கள் மற்றும்

தொழில்முனைவோருக்கு ஆக்கத்திறனளிப்பதற்கான அணுகுமுறை

குறித்து அவர் மேன்மை தங்கிய ராஜா மூடா பல ஆலோசனைகளை

வழங்கினார் என்று நஜ்வான் எனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது நல்லெண்ண அடிப்படையில் பிக்கல்பால்

விளையாட்டு உபகரணங்களை ராஜா மூடாவுக்கு நஜ்வான் அன்பளிப்பாக

வழங்கினார்.

டென்னிஸ் விளையாட்டைப் போன்ற, அதே அளவிலான திடலில்

விளையாடக் கூடிய இந்த பிக்கல்பால் விளையாட்டு மலேசியாவில்

தற்போது பிரபலமடைந்து வருகிறது. இந்த விளையாட்டில் தீவிர ஈடுபாடு

காட்டி வருபவர்களில் ராஜா மூடாவும் ஒருவராவார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.