SELANGOR

ஜோம் ஷாப்பிங் தீபாவளி வவுச்சருக்கு விண்ணப்பிக்கலாம் - லெம்பா ஜெயா தொகுதி

3 அக்டோபர் 2023, 4:00 AM
ஜோம் ஷாப்பிங் தீபாவளி வவுச்சருக்கு விண்ணப்பிக்கலாம் - லெம்பா ஜெயா தொகுதி

ஷா ஆலம்,  அக் 3: லெம்பா ஜெயா தொகுதியை சுற்றியுள்ள வசதி குறைந்தவர்கள் ஜோம் ஷாப்பிங் தீபாவளி வவுச்சருக்கு நேற்று முதல் அக்டோபர் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

முழுமையான ஆவணங்களைச் சமர்பித்து, லெம்பா ஜெயா தொகுதியின் மக்கள் சேவை மையத்தில் RM200 ஷாப்பிங் வவுச்சருக்கு விண்ணப்பிக்கலாம் என்று அதன் பிரதிநிதி சையட் அஹ்மத் சையட் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

விண்ணப்பதாரர் மற்றும் அவரின் கணவர் அல்லது மனைவின் அடையாள அட்டையின் நகல், மனைவி அல்லது கணவரின் இறப்புச் சான்றிதழ், வருமானச் சான்று மற்றும் தேர்தல் ஆணையத்தின் (SPR) நகல் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

"விண்ணப்பதாரர் லெம்பா ஜெயாவில் வாக்காளராக இருக்க வேண்டும் மற்றும் அங்கு வசிக்க வேண்டும். அதே நேரத்தில் மொத்த குடும்ப வருமானம் RM3,000க்கும் குறைவாக இருக்க வேண்டும். மேலும், தனி நபராக இருந்தால் மாத வருமானம் RM1,500 க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

பிங்காஸ் மற்றும் ஸ்கீம் மெஸ்ர ஊசிய எமாஸ் திட்டம் (SMUE) ஆகிய உதவிகள் பெறுபவர்கள் இந்த ஜோம் ஷாப்பிங் தீபாவளி வவுச்சருக்கு விண்ணப்பிக்க இயலாது என்றும் அவர் கூறினார்.

மேலும் தகவல்கள் அறிந்து கொள்ள 0182470897 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். வெற்றிகரமான விண்ணப்பங்கள் மட்டுமே தொகுதி சேவை மைய பிரதிநிதியால் தொடர்பு கொள்ளப்படும்.

ஜாம் ஷாப்பிங் ராயா என்பது குறைந்த வருமானம் பெறும் குழுக்களை இலக்காக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. அவரவர் பண்டிகைகளுக்கு ஏற்ப மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்கும் நீண்ட கால திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.