SELANGOR

கோத்தா கெமுனிங் உள்பட மூன்று தொகுதிகளில் இன்று மலிவு விற்பனை

3 அக்டோபர் 2023, 1:55 AM
கோத்தா கெமுனிங் உள்பட மூன்று தொகுதிகளில் இன்று மலிவு விற்பனை

ஷா ஆலம், அக் 3- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்

(பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்று

மேலும் மூன்று இடங்களில் நடைபெறவுள்ளன.

செமெந்தா தொகுதியிலுள்ள கம்போங் காப்பார் சமூக மண்டபம்,

செந்தோசா தொகுதியின் ஜாலான் அப்துல் ஹமிட் 4, அல்-பாராக்கா

பள்ளிவாசல் மற்றும் கோத்தா கெமுனிங் தொகுதியின் அண்டோரா

அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இன்று காலை 10.00 தொடங்கி

பிற்பகல் 1.00 மணி வரை இந்த மலிவு விற்பனை நடைபெறும்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட்

முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00

வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ

சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 13.00

வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு

கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம்

முழுவதும் 2,850 இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு விற்பனைகளின்

வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

நோன்புப் பெருநாளின் போது கோழி மற்றும் முட்டையை மலிவு

விலையில் மிக அதிகமான எண்ணிக்கையில் விற்பனை செய்த தற்காக

பி.கே.பி.எஸ். மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.