SELANGOR

அக்டோபர் மாதம் முழுவதும் பார்க்கிங் அபராதக் கட்டணக் குறைப்பு - எம்பிஎஸ்ஏ

2 அக்டோபர் 2023, 6:17 AM
அக்டோபர் மாதம் முழுவதும் பார்க்கிங் அபராதக் கட்டணக் குறைப்பு - எம்பிஎஸ்ஏ

ஷா ஆலம், அக். 2: ஷா ஆலம் மாநகராட்சி (எம் பிஎஸ்ஏ), நகரின் 23 வது ஆண்டு விழாவை முன்னிட்டு அக்டோபர் மாதம் முழுவதும் பார்க்கிங் அபராதக் கட்டணத்தை குறைக்கிறது.

சாலைப் போக்குவரத்து ஆணை (பார்க்கிங் ஒதுக்கீடு) எம் பிஎஸ்ஏ 2007 ன் கீழ் உள்ள அபராதங்களுக்கு RM10க்குக் குறைவான கட்டணம் வசூலிக்கப்படுவதாக உள்ளூர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

"மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அபராதங்களுக்கு 75 சதவீத குறைப்பும் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவோம்," என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஷா ஆலம் நகரம் 23 ஆண்டுகள் நிலையான, திறமையான மற்றும் வாழ ஏற்றது என கருப்பொருளை முன்னிட்டு அக்டோபர் மாதம் முழுவதும் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடத்தப்படும் என்றும் எம்பிஎஸ்ஏ தெரிவித்துள்ளது.

ஷா ஆலம் புத்தகக் கண்காட்சி, ஆர்க்கிட் கண்காட்சி, மீன்பிடித்தல் மற்றும் (படகோட்டுதல்) கயாக்கிங் போன்ற நிகழ்வுகளும் அதில் அடங்கும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.