SELANGOR

இன்று மேலும் மூன்று இடங்களில் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை

2 அக்டோபர் 2023, 3:23 AM
இன்று மேலும் மூன்று இடங்களில் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை

ஷா ஆலம், அக் 2- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்

(பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்று

காலை மேலும் மூன்று இடங்களில் நடைபெறவுள்ளது.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டிலான இந்த

விற்பனை ஈஜோக் தொகுதியின் கம்போங் புக்கிட் செம்பாக்கா

எம்.பி.கே.கே. மண்டபம், கோத்தா டாமன்சாரா தொகுதியின் கம்போங்

மிலாயு சுபாங் பாசார் தானி, புக்கிட் அந்தாரா பங்சா தொகுதியின் தாமான்

டாகாங் அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய இடங்களில் காலை 10.00 மணி

தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை இந்த விற்பனை நடைபெறும்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் ஒரு தட்டு பி

கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும் ஒரு பாக்கெட் இறைச்சி 10.00

வெள்ளிக்கும் ஒரு பாக்கெட் கெம்போங் மீன் 6.00 வெள்ளிக்கும் ஐந்து

கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 13.00

வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

கடந்த நோன்புப் பெருநாளின் இரு தினங்களில் கோழி மற்றும்

முட்டையை மானிய விலையில் மிக அதிக எண்ணிக்கையில் விற்பனை

செய்ததற்காகப் பி.கே.பி.எஸ். மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்

பிடித்தது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.