SELANGOR

பெர்மாத்தாங், டெங்கில் உள்பட ஐந்து இடங்களில் நாளை மலிவு விற்பனை

29 செப்டெம்பர் 2023, 3:38 AM
பெர்மாத்தாங், டெங்கில் உள்பட ஐந்து இடங்களில் நாளை மலிவு விற்பனை

ஷா ஆலம், செப் 29- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்

(பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை நாளை

மேலும் ஐந்து இடங்களில் நடைபெறவுள்ளது.

தெராத்தாய் தொகுதியின் ஜாலான் பெர்மாய் எச் எனுமிடத்திலும்

பெர்மாத்தாங் தொகுதியில் தஞ்சோங் காராங், பாடாங் அஸ்தாகாவிலும்

டெங்கில் தொகுதியில் கம்போங் சிலாங்கூர் டிரெஜிங் பாலாய் ராயாவிலும்

இந்த மலிவு விற்பனை காலை 10.00 தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை

நடைபெறும்.

இவை தவிர டுசுன் தொகுதியின் சுங்கை லுய் டேவான் ஓராங்

ராமாயிலும் சுங்கை பீலேக் தொகுதியின் பண்டார் பாரு சாலக் திங்கி வாக்

என்ற இடத்திலும் இந்த மலிவு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் ஒரு தட்டு பி

கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும் ஒரு பாக்கெட் இறைச்சி 10.00

வெள்ளிக்கும் ஒரு பாக்கெட் கெம்போங் மீன் 6.00 வெள்ளிக்கும் ஐந்து

கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 13.00

வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

கடந்த நோன்புப் பெருநாளின் இரு தினங்களில் கோழி மற்றும்

முட்டையை மானிய விலையில் மிக அதிக எண்ணிக்கையில் விற்பனை

செய்ததற்காக பி.கே.பி.எஸ். மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்

பிடித்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.