SELANGOR

நீர் விநியோகத் தடையை ஏற்படுத்தும் பராமரிப்பு பணி இரவு 7.00க்கு  நிறைவடையும்

29 செப்டெம்பர் 2023, 3:30 AM
நீர் விநியோகத் தடையை ஏற்படுத்தும் பராமரிப்பு பணி இரவு 7.00க்கு  நிறைவடையும்

ஷா ஆலம், செப் 29: பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் அக்டோபர் 10 ஆம் தேதி சுங்கை லங்காட் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் (எல்ஆர்ஏ) பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது.

இது தொடர்பான பணிகள் காரணமாக பெட்டாலிங், கோலாலம்பூர் மற்றும் உலு லங்காட்டில் காலை 9 மணிக்குத் திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடை ஏற்படும் என்று முகநூல் மூலம் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நாளில் இரவு 7 மணிக்கு பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 12 (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு நீர் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் போதுமான நீரை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

தட்டுப்பாடு நிலவினால், உதவிக்கு ஆயர் சிலாங்கூர் செயலி, முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் வழியாக நீர் வழங்கல் தடைகள் தொடர்பான தகவல்களை அணுகலாம் அல்லது ஆயர் சிலாங்கூரை 15300 என்ற எண்ணில் அழைக்கலாம்.

மருத்துவமனைகள், கிளினிக்குகள், டயாலிசிஸ் மையங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் போன்ற முக்கியமான வளாகங்களுக்கு முன்னுரிமை அளித்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆயர் சிலாங்கூர் தண்ணீர் லாரிகளை அனுப்பும்.

ஏதேனும் கேள்விகள் மற்றும் புகார்களை www.airselangor.com இணையதளத்தில் உள்ள உதவி மையத்திலும் ஆயர் சிலாங்கூர் செயலிலும் சமர்ப்பிக்கலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.