SELANGOR

சிலாங்கூர் சாம்பியன்ஸ் லீக்கில் (SCL) 16 அணிகள் போட்டியிடும்

26 செப்டெம்பர் 2023, 6:56 AM
சிலாங்கூர் சாம்பியன்ஸ் லீக்கில் (SCL) 16 அணிகள் போட்டியிடும்

சுபாங் ஜெயா, செப் 26: சுபாங் ஜெயா மாநகராட்சி அரங்கில் செப்டம்பர் 30 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறும் 2023ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் சாம்பியன்ஸ் லீக்கின் (SCL) மொத்தம் 16 அணிகள் போட்டியிடும்.

அதில் ஒவ்வொரு குழுவிலும் எட்டு அணிகள் ஏழு ஆட்டங்கல் விளையாடும் மற்றும் முதல் நான்கு அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும்.

இந்த ஆண்டுக்கான போட்டியில் வெற்றி பெற்ற குழுவிற்கு RM14,000 மற்றும் இரண்டாம் இடத்தை வெல்லும் குழுவிற்கு RM8,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

கடந்த ஆண்டு கெலானா யுனைடெட்டைச் சேர்ந்த ஃபைரூஸ் மொன்தானா ஆண்டின் சிறந்த பயிற்சியாளர் விருதை வென்றதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் கெலானா யுனைடெட் அணியில் விளையாடும் ஷாருல் ஹாசிக் ஆதரவாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 2022 ஆண்டின் சிலாங்கூர் சாம்பியன்ஸ் லீக்கில் இளம் விளையாட்டாளர் விருது பெற்றார்.

சிலாங்கூர் பெலியா வீரர் ஹாரி டேனிஷ் சிறந்த கோல் விருதை வென்ற நிலையில் முஹமட் ஹாரிஸ் ஷாருடின் சிலாங்கூர் சாம்பியன்ஸ் லீக் முழுவதும் அவரது அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த செயல் திறனுக்காக நடுவர்கள் குழு விருதைப் பெற்றார்.

சிலாங்கூர் சாம்பியன்ஸ் லீக் 2023

 

குழு A:

அம்பாங் உகே பாசிட்டிவ்

கோம்பாக் எஃப்.ஏ

கம்போங் பாரு போஸ்

கிள்ளான் ஃப்ரென்ஸ் யுனைடெட்

போர்ட் கிள்ளான் குழுவினர்

இங்க்ரஸ் கே.எல்

தெபுவான் கம்போங் பினாங்

கேகேபி பிரதர்வுட்

 

குழு B:

எம்பிஎஸ்ஏ

NPNG டமன்சாரா பெர்டானா

SFC இளைஞர்கள்

பெட்டாலிங் ஜெயா கெலனா யுனைடெட்

சிஜாங்காங் சிட்டி

ஏஏகே புஞ்சாக் ஆலம்

காஜாங் நோர்தன் மெர்பாவ்

நஜ்மி SFFC கோத்தா டமன்சாரா

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.