SELANGOR

மாலை வரை சிலாங்கூரில் இடியுடன் கூடிய கனமழை

26 செப்டெம்பர் 2023, 6:38 AM
மாலை வரை சிலாங்கூரில் இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், செப் 26: இன்று மாலை வரை சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவை கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கோம்பாக், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்கள் ஆகும் என்று முகநூல் வழியாக மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

இதே வானிலை தான் லாபுவான், கோலாலம்பூர், பேராக், பகாங், நெகிரி செம்பிலான், ஜொகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களிலும் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாக பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன் பாட்டை பதிவிறக்கம் செய்யவும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.