SELANGOR

கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தில் 75 கிலோ குப்பைகள் சேகரிப்பு

25 செப்டெம்பர் 2023, 8:08 AM
கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தில் 75 கிலோ குப்பைகள் சேகரிப்பு

ஷா ஆலம், செப் 25: கடந்த செப்டம்பர் 23-ம் தேதி தெங்கு டத்தின் படுகா செத்தியா சஹதாஷா தலைமையில் நடைபெற்ற கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தில் மொத்தம் 75 கிலோ குப்பைகள் வெற்றிகரமாகச் சேகரிக்கப்பட்டன.

உணவு பேக்கேஜ், பாட்டில்கள், ஸ்ட்ராக்கள், துணி, டயப்பர்கள் மற்றும் சிகரெட் துண்டுகள் போன்ற பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்ட கழிவுகளில் இருந்ததாகக் கோலா லங்காட் நகராண்மை கழகம் (எம்பிகேஎல்) தெரிவித்துள்ளது.

"கடற்கரையில் குப்பைகளைப் போடாமல் தூய்மையான சூழலைப் பாதுகாக்கக் கடற்கரைக்குச் செல்வோரை நாங்கள் அழைக்கிறோம்.

"சுத்தத்தைப் பராமரிப்பதில் அனைத்து தரப்பினரும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்" என முகநூலில் உள்ளாட்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

2017 இல் ஏற்பாடு செய்யப்பட்டதிலிருந்து ஆறாவது முறையாக நடைபெறும் இந்த திட்டம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான ஒரு முன்முயற்சி ஆகும். இத்திட்டம் தெங்கு டத்தின் படுகா செத்தியா சஹதாஷா சிந்தனையில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தில் ``The Body Shop Malaysia``, சிலாங்கூர் இளைஞர்கள், யாயாசான் ராஜா மூடா சிலாங்கூர், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பொதுப் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.