புத்ராஜெயா, செப் 25: ஜாலான் பெர்சியாரான் உத்ரா, கிலோமீட்டர் 5.7 இல் பூச்சோங் நோக்கி செல்லும் சாலையில் ஏற்பட்ட விபத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு காரணமாக இருந்த டிரெய்லர் டிரைவர் மீது புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்படும்.
அந்த ஓட்டுநர் (29) மீது சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 ன் பிரிவு 41(1)ன் கீழ் குற்றம் சாட்டப்படும் என புத்ராஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி. ஏ. அஸ்மாதி அப்துல் அஜீஸ் கூறினார்.
"ஒ.கே.தி (குற்றம் சாட்டப்பட்ட நபர்) குற்றச்சாட்டிற்காக நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தார்" என்று அவர் கூறினார்.
முன்னர், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 ன் பிரிவு 41 (1) இன் கீழ் காவல்துறையினர் விசாரணை நடத்துவதற்கு ஏற்ற வகையில் ஓட்டுனர் நான்கு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
கடந்த புதன்கிழமை காலை 10.14 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், பெர்சியாரான் உத்ராவில் 13 வாகனங்கள் மீது டிரெய்லர் மோதியதில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் இறந்தனர், ஏழு பேர் காயமடைந்தனர்.
``Le Tour de Langkawi (LTDL) கொன்வாய் பயிற்சிக்காகச்`` சம்பவம் நடந்த இடத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- பெர்னாமா








