SELANGOR

சிலாங்கூரில் நிரந்தரக் காடுகளின் பரப்பளவு அதிகரிப்பு

25 செப்டெம்பர் 2023, 6:02 AM
சிலாங்கூரில் நிரந்தரக் காடுகளின் பரப்பளவு அதிகரிப்பு

உலு சிலாங்கூர், செப் 25: கோலா சிலாங்கூர் மற்றும் கோலா லங்காட்டில் உள்ள இரண்டு காடுகளை அரசிதழில் வெளியிட்டதன் மூலம் சிலாங்கூரில் 250,739 ஹெக்டேர் அளவுள்ள நிரந்தரக் காடுகளின் பரப்பளவு இந்த ஆண்டு அதிகரித்து வருகிறது.

அக்காடுகள் கோலா சிலாங்கூர் இயற்கை பூங்கா மற்றும் 489 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட தஞ்சோங் டுவா பெலாஸ் நேச்சர் ரிசர்வ் ஆகும் என சுற்றுச்சூழல் துறை பொறுப்பு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

"சிலாங்கூரில் அதிக நிரந்தர வன இருப்புக்களை பராமரிப்பதில் அதிக சதவீதத்தை பதிவு செய்ய சிலாங்கூர் மாநில வனத்துறையுடனான (JPNS) மாநிலத்தின் உறுதிப்பாட்டை இது காட்டுகிறது.

மரம் வெட்டும் நடவடிக்கைகளை "2035 வரை முடக்கிய ஒரே மாநிலம் சிலாங்கூர் ஆகும்.  அதன் மூலம், இந்த மொத்த பரப்பளவு அதிகரிக்கப்படும்," என்று அவர் கூறினார்.

சிலாங்கூர் மாநில வனத்துறை கூடுதல் நிரந்தர காடுகளை முன்மொழிந்துள்ளது. அவை தற்போது பல பகுதிகளை உள்ளடக்கிய வர்த்தமானியில் வெளியிடப்படுகின்றன என ஜமாலியா மேலும் கூறினார்.

2010 ஆம் ஆண்டு முதல் மாநிலத்தின் குறைந்தபட்சம் 30 சதவீத நிலத்தை நிரந்தர வனப்பகுதியாகப் பராமரிக்க சிலாங்கூர் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்த நடவடிக்கை காட்டுகிறது என அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.