SELANGOR

நாட்டுப்புறக் கச்சேரியில் 5,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்பு

25 செப்டெம்பர் 2023, 3:01 AM
நாட்டுப்புறக் கச்சேரியில் 5,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்பு

பெட்டாலிங் ஜெயா, செப் 25: நேற்றிரவு முதல் ஆசிய பசிபிக் இளைஞர் நாட்டுப்புற விழா 2023யை முன்னிட்டு நடந்த நாட்டுப்புறக் கச்சேரியில் 5,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.

கச்சேரியில் ஹத்தன், ஜியானா ஜைன், எல்லா, ஏவி மற்றும் ஃப்ரெடோ ஃப்ளைபைட்ஸ் போன்ற நாட்டின் பிரபல கலைஞர்களும் இடம்பெற்றனர்.

இதில் மலேசியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், தாய்லாந்து, ஈரான், பிலிப்பைன்ஸ், இலங்கை, சிங்கப்பூர், திமோர் லெஸ்டே மற்றும் லிதுவேனியா ஆகிய 12 நாடுகளின் கலாச்சார நிகழ்ச்சிகளையும் பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.

சிலாங்கூர் பெண்கள் மேம்பாட்டு துறை பொறுப்பு உறுப்பினர் அன்பால் சாரி விழாவை நிறைவு செய்தார்.

செப்டம்பர் 21 முதல் 26 வரை 'கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் போற்றுதல்' என்ற கருப்பொருளில் நடத்தப்பட்ட இந்நிகழ்வின் ஏற்பாட்டிற்கு எம்பிபிஜே மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்தியது.

இந்நிகழ்வில் சர்வதேசக் கலாச்சார நிகழ்ச்சிகள், கலை வாழ்க்கை கருத்தரங்குகள், பெட்டாலிங் ஜெயா கலை மாநாடு 2023 உள்ளிட்ட பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.