SELANGOR

ஜுவாலான் ஏஹ்சான் ரஹ்மா திட்டம் மூன்று இடங்களில் தொடர்கிறது

25 செப்டெம்பர் 2023, 2:18 AM
ஜுவாலான் ஏஹ்சான் ரஹ்மா திட்டம் மூன்று இடங்களில் தொடர்கிறது

ஷா ஆலம், செப்.25: இன்று காலை 10 மணிக்குக் கோழி, மீன், முட்டை, அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் விற்பனை செய்யும் ஜுவாலான் ஏஹ்சான் ரஹ்மா திட்டம் மூன்று இடங்களில் தொடர்கிறது.

அந்நிகழ்வு சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகம், யுஎஸ்ஜே 8 (சுபாங் ஜெயா), லாமன் நியாக @ அம்பாங் வாட்டர்ஃபிரண்ட் (லெம்பா ஜெயா) மற்றும் தாமான் ஸ்ரீ புத்ரி மேரு (மேரு) ஆகிய இடங்களில் நடைபெறும் என சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகம் (பிகேபிஎஸ்) அறிவித்தது. .

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும்

விற்கப்படுகிறது.

பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.