SELANGOR

அரிசி விநியோக பிரச்சனையைச் சமாளிக்க, விற்பனைக்கு மேலும் ஏழு இடங்கள் - மந்திரி புசார்

21 செப்டெம்பர் 2023, 6:31 AM
அரிசி  விநியோக பிரச்சனையைச் சமாளிக்க, விற்பனைக்கு மேலும்  ஏழு இடங்கள்  - மந்திரி புசார்

ஷா ஆலம், செப்டம்பர் 21: எஹ்சான் ரஹ்மா சேல்ஸ் (ஜேஇஆர்) திட்டத்தின் ஒரு பகுதியானது, தற்போதைய விநியோகப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் ஒரு நடவடிக்கையாக அரிசியை விற்பனை செய்வதில் கவனம் செலுத்துகிறது.

அரிசி விநியோகம் மீண்டும் சீராகும் வரை மாநில அரசின்  முக்கிய விற்பனைகளில் இதுவும் ஒன்று என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்  ஷாரி கூறினார்.

இதற்கிடையில், சிலாங்கூரில் அரிசி விநியோகத்தின் நிலையை அறிய உள்நாட்டு வர்த்தகம் மற்றும்  வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் பிரதிநிதிகளை இன்று சந்திக்க உள்ளதாக அமிருடின் தெரிவித்தார்.

இன்று முதல், சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகம் (PKPS) 2,700 ஐந்து கிலோ அரிசி  மூட்டைகளை ஒரு நாளைக்கு ஏழு இடங்களில் RM10க்கு விற்கிறது.

விஸ்மா பிகேபிஎஸ் கிளைகள் (பிரவு 14), எஹ்சான் பிகேபிஎஸ் (பிரிவு 9), எஹ்சான் பிகேபிஎஸ் (மேரு), ஹ்சான் கியோஸ்க் (சிலாங்கூர் பழ பள்ளத்தாக்கு) மற்றும் மூன்று எஹ்சான் பிகேபிஎஸ் மொபைல்    விற்பனை டிரக்குகள் ஆகியவை சம்பந்தப்பட்ட இடங்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.