SELANGOR

ஸ்ரீ மூடாவில் ஏழு உணவகங்கள் மீது எம்.பி.எஸ்.ஏ. சோதனை- 19 குற்றப்பதிவுகள் வெளியீடு

20 செப்டெம்பர் 2023, 8:00 AM
ஸ்ரீ மூடாவில் ஏழு உணவகங்கள் மீது எம்.பி.எஸ்.ஏ. சோதனை- 19 குற்றப்பதிவுகள் வெளியீடு

ஷா ஆலம், செப் 20- இங்குள்ள செக்சன் 25,

தாமான ஸ்ரீமூடாவில் ஷா ஆலம் மாநகர்

மன்றத்தின் சுகாதார, லைசென்ஸ் மற்றும்

அமலாக்கத் துறை ஆகியவை

உணவகங்களுக்கு எதிரான ஒருங்கிணைந்த

சோதனை நடவடிக்கையை நேற்று

மேற்கொண்டன.

உணவகங்களில் தூய்மை

கடைபிடிக்கப்படுவதையும் நிர்ணயிக்கப்பட்ட

விதிமுறைகளை முறையாகப்

பின்பற்றப்படுவதையும் உறுதி செய்யும்

நோக்கில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில்

ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராமு

நடராஜனும் பங்கு கொண்டார்.

இந்த நடவடிக்கையின் போது மொத்தம் ஏழு

உணவகங்கள் மீது சோதனை

நடத்தப்பட்டன. பல்வேறு குற்றங்களுக்காக

19 குற்றப்பதிவுகள் சம்பந்தப்பட்ட

உணவகங்களுக்கு வழங்கப்பட்டன என்று

மாநகர் மன்ற உறுப்பினர் ராமு கூறினார்.

இச்சோதனையில் வர்த்தக லைசென்ஸ்,

உணவகங்களின் தூய்மை ஆகியவற்றோடு

உணவகப் பணியாளர்களுக்கு டைபாய்டு

தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா என்பதுmகுறித்தும் சோதனை மேற்கொள்ளப்பட்டது

என்று அவர் சொன்னார்.

இது தவிர, முகக் கவசம், தொப்பி மற்றும்

ஏப்ரன் அணியாத மற்றும் சமையல்

எண்ணெய் கழிவுகள் கால்வாயில்

கலக்காமலிருப்பதற்கு முறையான

தடுப்புகளை அமைக்காத உணவகங்களுக்கு

எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது

என்று அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை

முறையை கடைபிடிப்பதை உறுதி

செய்வதற்கும் சுற்றுச்தூழல்

பாதுகாக்கப்படுவதற்கும் ஏதுவாக உணவக

உரிமையாளர்கள் தங்கள் வளாகங்களை

எப்போதும் தூய்மையுடன் வைத்திருக்க

வேண்டும் என்றும் அவர் கேட்டுக்

கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.