SELANGOR

இன்று முதல் ஏஹ்சான் அரிசி விற்பனை திட்டம்

20 செப்டெம்பர் 2023, 7:51 AM
இன்று முதல் ஏஹ்சான் அரிசி விற்பனை திட்டம்

ஷா ஆலம், செப் 20: மக்கள் 5 கிலோ அரிசியை RM13க்கு குறைவாகப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகம் (பிகேபிஎஸ்) ஒவ்வொரு நாளும் ஏழு இடங்களில் 2,700 அரிசி பேக்கட்டுகளை வழங்கும்.

உள்ளூர் அரிசி விலை உயர்வால் பாதிக்கப் பட்டுள்ள மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் ஏஹ்சான் அரிசி விற்பனையானது மாநில அரசின் முயற்சியாகும் என சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகத்தின் (பிகேபிஎஸ்) தலைமைச் செயல் அதிகாரி கூறினார்.

"இந்த அரிசி பிகேபிஎஸ் விற்பனை வளாகத்தில் RM13 விலையில் விற்கப்படுகிறது. அதே நேரத்தில் ஏஹ்சான் ரஹ்மா விற்பனை இடத்தில் அதன் விலை RM10 ஆக உள்ளது.

"எந்தத் தரப்பும் பாதிக்கப்படாத வகையில் மக்களுக்கு நல்ல உணவு விநியோகச் சங்கிலியைப் பராமரிக்க நாங்கள் விரும்புகிறோம்" என்று டாக்டர் முகமட் கைரில் முகமட் ராஸி கூறினார்.

 

ஏஹ்சான் அரிசியை ஏழு இடங்களில் பெறலாம்:

  •  விஸ்மா பிகேபிஎஸ் அவுட்லெட், பிரிவு 14
  • ஏஹ்சான் பிகேபிஎஸ் அவுட்லெட், பிரிவு 9
  • ஏஹ்சான் பிகேபிஎஸ் அவுட்லெட், மேரு
  • எஹ்சான் கியோஸ்க், சிலாங்கூர் புருட் வெல்லி
  • ஏஹ்சான் பிகேபிஎஸ்யின் மூன்று நடமாடும் விற்பனை டிரக்குகள்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.