SELANGOR

கேரம் போட்டியில் பங்கேற்கப் பொதுமக்களுக்கு அழைப்பு - சுபாங் ஜெயா மாநகராட்சி

20 செப்டெம்பர் 2023, 7:49 AM
கேரம் போட்டியில் பங்கேற்கப் பொதுமக்களுக்கு அழைப்பு - சுபாங் ஜெயா மாநகராட்சி

ஷா ஆலம், செப் 20: சுபாங் ஜெயா மாநகராட்சி தனது மூன்றாவது ஆண்டு விழாவை முன்னிட்டு எதிர்வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடத்தும் கேரம் போட்டியில் பங்கேற்கப் பொதுமக்களை அழைக்கிறது.

இப் போட்டி சுபாங் ஜெயா மாநகராட்சி USJ 7 பல்நோக்கு மண்டபம், சுபாங் ஜெயாவில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். இதில் கலந்து கொண்டு RM4,000க்கும் அதிகமான ரொக்கப் பரிசுகளை வெல்ல வாய்புண்டு.

வெற்றியாளருக்கு ரொக்கமாக RM1,500 வழங்கப்படும். அதைத் தொடர்ந்து இரண்டாம் இடத்திற்கு RM800, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களுக்கு RM400, ஐந்து முதல் எட்டாவது இடம் வரைக்கும் RM150 மற்றும் ஒன்பது முதல் 16வது இடம் வரைக்கும் RM50 வழங்கப்படும்.

RM40 பங்கேற்பு கட்டணத்துடன் பதிவு செய்து பணம் செலுத்தும் முதல் 128 அணிகளுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.

இப் போட்டியில் பங்கேற்பதற்கான இறுதித் தேதி அக்டோபர் 17 ஆகும். ஏதேனும் கேள்விகள் இருந்தால் செயலாளர் முகமட் நோர் அஃபாண்டி (03-8026 4382) அல்லது அனுவார் இஸ்மாயில் (011-6187 6310) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.