SELANGOR

மடாணி அரசாங்கத்தின் இலக்கிடப்பட்ட உதவித்தொகை முறை நடுத்தர மற்றும் குறைந்த வருமான பிரிவினருக்கு சுமையாக அமையாது

20 செப்டெம்பர் 2023, 6:47 AM
மடாணி அரசாங்கத்தின் இலக்கிடப்பட்ட உதவித்தொகை முறை நடுத்தர மற்றும் குறைந்த வருமான  பிரிவினருக்கு சுமையாக அமையாது

ஷா ஆலம், செப் 20.: அரசாங்கத்தின்  இலக்கிடப்பட்ட உதவித்தொகை முறை  நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பெறும் பிரிவினருக்குச் சுமையை ஏற்படுத்தாது என்று பிரதமர் உறுதியளித்தார்.

ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் சுமையை அரசாங்கம் நிச்சயமாக அதிகமாகது என்று நிதி அமைச்சராகவும் இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

"நாங்கள் ஒருமுகப்படுத்தும்  இலக்கிடப்பட்ட உதவித்தொகை முறை  நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்குச் சுமையாக இருக்காது என்று உத்தரவாதம் அளிக்கிறேன்.

அடுத்த மாதம் 2024ஆம் ஆண்டுக்கான இரண்டாவது மடாணி பட்ஜெட்டில்  இலக்கிடப்படும் உதவித்தொகை முறை  குறித்த  விவரங்கள் சமர்ப்பிக்கப்படும் என்றும் அன்வார் அறிவித்தார்.

அடுத்த ஆண்டுக்கு  இலக்கிடப்படும்  உதவி தொகை  முழுமையாக செயல்படுத்தப்படும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. ஆனால், அதற்குப் பொருத்தமான அணுகுமுறை தேவைப்படுகிறது என பொருளாதார அமைச்சர் கூறினார்.

தகுதிவாய்ந்த குழுக்கள் அல்லது தொழில்கள் மட்டுமே பயனடைவதை உறுதிசெய்ய  இலக்கிடப்பட்ட உதவித்தொகை முறை  பயன்படுத்தப்படும் என்று ரஃபிஸி ரம்லி தெரிவித்ததாக கூறப்படுகிறது

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.