SELANGOR

இரண்டு மணிநேர வாகன நிறுத்துமிட திட்டம் - ஷா ஆலம் மாநகராட்சி

20 செப்டெம்பர் 2023, 4:11 AM
இரண்டு மணிநேர வாகன நிறுத்துமிட திட்டம் - ஷா ஆலம் மாநகராட்சி

ஷா ஆலம், செப் 20: செப்டம்பர் 4 முதல் ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) அதன் நிர்வாகப் பகுதியின் கீழ் உள்ள 67 இடங்களில் இரண்டு மணிநேர வாகன நிறுத்துமிடத் திட்டத்தை அமல்படுத்தியது.

திங்கள் முதல் வெள்ளி வரை பல்வேறு பயன்பாடுகள் மூலம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு RM1.20 (அதிகபட்சம் இரண்டு மணிநேரம்) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என உள்ளூர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

"இரண்டு மணிநேர வாகன நிறுத்துமிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்கு மேல்முறையீடு மற்றும் அபராதக் குறைப்பு எதுவும் இல்லை" என்று எம்பிஎஸ்ஏ முகநூலில் தெரிவித்துள்ளது.

ஸ்மாட் சிலாங்கூர் பார்க்கிங், வெலக்ஸி பார்க்கிங், கோபேயே, ஜோம் பார்க்கிங், தச் & கோ இவாலட் மற்றும் செட்டல் போன்ற செயலிகள் மூலம் பணம் செலுத்தலாம்.

சாலை போக்குவரத்து ஆணை (பார்க்கிங் ஒதுக்கீடு) வர்த்தமானி (ஷா ஆலம் மாநகராட்சி) திருத்தம் 2023 இன் கீழ் இந்த இரண்டு மணி நேர வாகன நிறுத்தம் செயல்படுத்தப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.