ஷா ஆலம், செப் 20: சிலாங்கூர் கெ அடிலான் நாட்டின் மாற்றத்திற்கான நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தி 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு ஜுப்லி பேராக் விழாவை இன்று கொண்டாட உள்ளது.
இன்று இரவு 8 மணிக்குப் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி சிவிக் மண்டப ஆடிட்டோரியத்தில் நடக்க உள்ள விழாவில் சிலாங்கூர் மாநிலத் தலைமைக் குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கலந்து கொள்வார்.
இந்த நிகழ்வில் கெ அடிலான் 2023 க்கான பெண்கள் மற்றும் இளைஞர்களின் ஆண்டுப் பொதுக்கூட்டம் டத்தோ மந்திரி புசார் அமிருடின் தொடங்கி வைக்க உள்ளார்.








