SELANGOR

வர்த்தக விரிவாக்கத்திற்கு வெ.50,000 வரை கடனுதவி- ஹிஜ்ரா அறவாரியம் வழங்குகிறது

20 செப்டெம்பர் 2023, 3:08 AM
வர்த்தக விரிவாக்கத்திற்கு வெ.50,000 வரை கடனுதவி- ஹிஜ்ரா அறவாரியம் வழங்குகிறது

ஷா ஆலம், செப் 20- தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்பும்

மாநிலத்திலுள்ள வணிகர்கள் ஐ-பிஸ்னஸ் கடனுதவித் திட்டத்திற்கு

விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இத்திட்டத்தின் கீழ் மாநிலத்திலுள்ள குறு,சிறு மற்றும் நடுத்தர

தொழில்முனைவோருக்கு 50,000 வெள்ளி வரை வர்த்தக கடனுதவி

வழங்கப்படுவதாக யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம் கூறியது.

இந்த ஐ-பிஸ்னஸ் திட்டத்தில் அனைத்து துறைகளைச் சேர்ந்த

வர்த்தகர்களும் பங்கேற்கலாம். மேல் விபரங்களுக்கு www.hijrahselangor.com

என்ற அகப்பக்கத்தை வலம் வாருங்கள் என தனது பேஸ்புக் பதிவில் அது

குறிப்பிட்டுள்ளது. இந்த கடனுதவிக்கான விண்ணப்பங்களை

http://mikrokredit.selangor.gov.my என்ற இணைப்பின் வாயிலாகவும்

மேற்கொள்ளலாம்.

மேலும் அதிகமான தொழில்முனைவோர் பயன்பெறுவதற்கு ஏதுவாக 2023

வரவு செலவுத் திட்டத்தில் 13 கோடி வெள்ளி நிதியை மாநில அரசு

ஹிஜ்ரா அறவாரியத்திற்கு ஒதுக்கியது.

ஐ-பிஸ்னஸ் தவிர்த்து ஐ-பெர்மூசிம், ஜீரோ டு ஹீரோ, நியாகா டாருள்

ஏசான் (நாடி), ஐ-அக்ரோ, ஐ-லெஸ்தாரி மற்றும் கோ டிஜிட்டல் ஆகிய

வர்த்தக கடனுதவித் திட்டங்களையும் ஹிஜ்ரா அமல்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.