SELANGOR

செந்தோசா, ரவாங், ஸ்ரீ செர்டாங்கில் நாளை மலிவு விற்பனை

19 செப்டெம்பர் 2023, 9:43 AM
செந்தோசா, ரவாங், ஸ்ரீ செர்டாங்கில் நாளை மலிவு விற்பனை

ஷா ஆலம், செப் 19 - சிலாங்கூர் விவசாய

மேம்பாட்டுக் கழகத்தால் (பி.கே.பி.எஸ்.)

நடத்தப்படும் ஏஹ்சான் ரஹ்மா மலிவு

விற்பனைத் திட்டம் நாளை மேலும் மூன்று

இடங்களில் தொடரும்.

காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி

வரை நடைபெறும் இந்த விற்பனை

செந்தோசா தொகுதியின் சுராவ் அஸ்-

சலாமிலும் ரவாங் தொகுதியின் கஹாயா

இமான் பள்ளிவாசலிலும் ஸ்ரீ செர்டாங்

கெமாஸ் பின்புற வளாகத்திலும் நடைபெற உள்ளது.

இந்த மலிவான விற்பனை முந்தைய

ஏஹ்சான் ரக்யாட் விற்பனையின்

தொடர்ச்சியாகும். உள்நாட்டு வர்த்தகம்

மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின்

ஒத்துழைப்புடன் கடந்த ஜூன் மாதம்

மறுபெயரிடப்பட்ட இந்த விற்பனை அடுத்த

டிசம்பர் வரை தொடரும்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00

வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட்

10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு

தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன்

ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ

சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5

கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும்

விற்கப்படுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.