SELANGOR

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் சபாநாயகராக வேங் சான் நியமிக்கப்பட்டார்

19 செப்டெம்பர் 2023, 5:51 AM
சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் சபாநாயகராக வேங் சான் நியமிக்கப்பட்டார்

ஷா ஆலம், செப் 19: பந்திங் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் லாவ் வேங் சான் (45) சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் (DNS) இத்தவணைக்குச் சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

இன்று இங்குள்ள அனெக்ஸ் கட்டிடத்தில் நடைபெற்ற 15 வது சட்டமன்றத்தின் முதல் கால மாநாட்டின் முதல் கூட்டத்தில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டதாக செயலாளர் ஜே. காயத்திரி அறிவித்தார்..

சிகிஞ்சான் உறுப்பினர்  இங் சுயீ லீம் அவர்களால் முன்மொழியப்பட்டு இரகசிய வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை வேங் சான் பெற்றார்.

வேங் சான் அவர்கள் 2008 முதல் இரண்டு முறை கம்போங் துங்கு பிரதிநிதியாக இருந்துள்ளார்.  கடந்த மாநிலத் தேர்தலில் கட்சியின்  ஆணைக்கு  கட்டுப்பட்டு பந்திங் தொகுதியில் வி பாப்பா ராய்டுவுக்கு வழிவிட்டு  தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து  ஒதுங்கிக் கொண்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.