SELANGOR

மலேசிய ஹலால் சரிபார்ப்பு சான்றிதழ் மொத்தம் 8,272 நிறுவனங்கள் பெற்றுள்ளன

18 செப்டெம்பர் 2023, 8:57 AM
மலேசிய ஹலால் சரிபார்ப்பு சான்றிதழ் மொத்தம் 8,272 நிறுவனங்கள் பெற்றுள்ளன

ஷா ஆலம், செப்டம்பர் 18: மலேசிய ஹலால் சரிபார்ப்பு சான்றிதழ் (SPHM) மொத்தம் 8,272 நிறுவனங்கள் பெற்றுள்ளன. அவற்றில் 7,306 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) ஆகும்.

அவற்றில் 39.53 சதவீதம் அல்லது 3,270 நிறுவனங்கள் பூமிபுத்ரா ஆகும் என பிரதமர் துறையின் (மத விவகாரங்கள்) அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் நயிம் மொக்தார் கூறினார்.

"மலேசிய ஹலால் சரிபார்ப்பு சான்றிதழ்களுக்கான விண்ணப்பதாரர்களின் பதிவு, மலேசிய நிறுவனங்கள் ஆணையத்தின் தகவலின் அடிப்படையில் அமைந்துள்ளது.

இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்தை முடித்துக் கொண்டு பேசிய அவர், "பாலினப் பிரிவு தகவல்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை,`` என்றார்.

கடந்த ஆண்டு இறுதியில் சிலாங்கூர் 5,000க்கும் மேற்பட்ட ஹலால் சான்றிதழ் வைத்திருப்பவர்களைப் பதிவு செய்துள்ளதாகவும், அதில் 70 சதவிகிதம் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் என்றும் முன்னாள் ஹலால் தொழில்துறை பொறுப்பு உறுப்பினர் ஜவாவி அஹ்மத் முக்னி தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக, மாநில அரசு ஹலால் தொழிலை தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. மேலும் ஜூலை மாதம் ஹலால் மாநில செயல்திறன் விருதையும் பெற்றுள்ளது.

உலக ஹலால் எக்ஸலன்ஸ் விருது 2022 (WHEA 2022) உடன் இணைந்து இந்த அங்கீகாரமும் தொழில்துறையை ஊக்குவிப்பதில் சிறந்த முறையில்  செயல்படுத்த படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.