SELANGOR

மாநிலத்திலுள்ள அனைத்து 98 தமிழ்ப்பள்ளிகளுக்கும் இயன்ற உதவிகளை வழங்குவேன்- பாப்பாராய்டு வாக்குறுதி

18 செப்டெம்பர் 2023, 7:27 AM
மாநிலத்திலுள்ள அனைத்து 98 தமிழ்ப்பள்ளிகளுக்கும் இயன்ற உதவிகளை வழங்குவேன்- பாப்பாராய்டு வாக்குறுதி

ஷா ஆலம், செப் 18- சிலாங்கூர்

மாநிலத்திலுள்ள அனைத்து 98

தமிழ்ப்பள்ளிகளுக்கும் தம்மால் இயனற

அனைத்து உதவிகளையும் வழங்கவுள்ளதாக

மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்

வீ.பாப்பாராய்டு உறுதியளித்துள்ளார்.

அடுத்த ஐந்தாண்டு காலத்தில் எனது

பொறுப்பிலுள்ள இந்த தமிழ்ப்பள்ளிகளின்

வளர்ச்சிக்கு

எவ்வாறு உதவுவது என்று

ஆராயவிருக்கிறேன் என்று அவர்

குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில் கிள்ளான், நோர்த்

ஹாம்மோக் தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்கு

மாநில அரசின் வாயிலாக நிச்சயம் உதவி புரிவேன். இந்தப்

பள்ளியில் திறந்த வெளி மண்டபம்

அமைப்பது குறித்து பள்ளி வாரியத்

தலைவரிடம் பேசினேன். சிறுதுளி பெரு

வெள்ளம் போல் சிறுகச் சேமித்தால்

இத்திட்டத்தை நனவாக்கலாம். எமரால்டு

தமிழ்ப்பள்ளியில் பிரமாண்ட திறந்த வெளி

மண்டபத்தை நிர்மாணித்ததன் மூலம் இதனை

நிரூபித்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

சிலம்பக் கோர்வைக் கழகத்தின் ஆதரவுடன்

இங்குள்ள நோர்த் ஹம்மோக் தமிழ்ப் பள்ளி

மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு

செய்திருந்த பள்ளி மாணவர்களுக்கான

சிலம்ப குரு பூஜை நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு

கூறினார்.

இந்நாட்டில் நமது கலை, கலாசாரம்

தொடர்ந்து நிலைத்திப்பதை உறுதி

செய்வதற்கு தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து

செயல்படுவது அவசியம் என்றும் அவர்

வலியுறுத்தினார்.

மாநிலத்தில் 98 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன

அவை நமது கலை, கலாசாரத்தைக் கட்டிக்

காப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. ஆகவே,

தமிழ்ப் பள்ளிகள் நிலைத்திருப்பதை உறுதி

செய்வது பெற்றோர்களின் கடமையாகும்.

நாம் அனைவரும் நமது பிள்ளைகளை தமிழ்ப்

பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றார்

அவர்.

நமது பாரம்பரிய கலையாக விளங்கும்

சிலம்பத்தை தொடர்ந்து கட்டிக் காத்து வரும்

நோக்கில் இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த

பள்ளி நிர்வாகம், மேலாளர் வாரியம் மற்றும்

பெறாறோர் ஆசிரியர் சங்கத்திற்கு அவர்

பாராட்டுதலைத் தெரிவித்துக் கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.