SELANGOR

3-2 என்ற கோல் கணக்கில் சிலாங்கூர் FC U18 வெற்றி கோப்பையை வென்றது

18 செப்டெம்பர் 2023, 6:25 AM
3-2 என்ற கோல் கணக்கில் சிலாங்கூர் FC U18 வெற்றி கோப்பையை வென்றது

ஷா ஆலம், செப் 18: நேற்று இரவு ``UiTM`` ஸ்டேடியம் ஷா ஆலமில் நடந்த இரண்டாவது இறுதி ஆட்டத்தில் ஜொகூர் டாருல் தாசிம் (JDT) IVஐ தோற்கடித்த சிலாங்கூர் FC U18 தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இளைஞர் கோப்பை தக்க வைத்துக் கொண்டது.

கடந்த வாரம் நடந்த முதல் இறுதி ஆட்டத்தில் 1-1 என சமநிலையில் இருந்ததை அடுத்து, இந்த ஆண்டு இரு அணிகளும் பலம் வாய்ந்ததாக காணப்பட்டன.

சிலாங்கூர் எஃப்சி U18, 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தது. ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் அமிருல் இஸ்வான் அடித்த கோல் மூலம் ரெட் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டது.

சிலாங்கூர் FC U18 அணியின் நான்காவது முறையாக இக்கோப்பையை வென்றுள்ளது. இதற்கு முன்னர் 2013, 2015 மற்றும் 2022 இல் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.