SELANGOR

சாலைத் தடுப்பில் ஜே.பி.ஜே. அதிகாரியை மோதிய ஆடவருக்கு நான்கு நாள் தடுப்புக் காவல்

18 செப்டெம்பர் 2023, 6:24 AM
சாலைத் தடுப்பில் ஜே.பி.ஜே. அதிகாரியை மோதிய ஆடவருக்கு நான்கு நாள் தடுப்புக் காவல்

ஷா ஆலம், செப் 18- சாலைத் தடுப்புச்

சோதனையின் போது சாலைப்

போக்குவரத்துத் துறையின் (ஜேபிஜே)

அமலாக்க அதிகாரியை மோதிய மோட்டார்

சைக்கிளோட்டி ஒருவர் இன்று தொடங்கி

நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில்

வைக்கப்பட்டுள்ளார்.

இருபத்தைந்து வயதான அந்த ஆடவருக்கு

எதிரான தடுப்புக் காவல் அனுமதியை

மாஜிஸ்திரேட் உத்மான் அப்துல் கனி

வழங்கியதாக பெரித்தா

ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று காலை 11.00 மணியளவில் சிரம்பான்-

போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையின் 28வது

கிலோமீட்டரில் நிகழ்ந்த இந்த சம்பவம் சமூக

ஊடகங்களில் பரவலாக வைரலானது.

இச்சம்பவத்தில் யமாஹா ரக மோட்டார்

சைக்கிளை ஓட்டிச் சென்ற சந்தேக நபர்

சாலைத் தடுப்பை மீறிச் சென்றதோடு

ஜே.பி.ஜே. அதிகாரி முகமது நூர்ஹக்கிம்

முகமது ரசீபையும் மோதித் தள்ளினார்.

சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக

நபர் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சாலை

வரி காலாவதியான நிலையிலும்

வாகனமோட்டும் லைசென்ஸ் இன்றியும்

மோட்டார் சைக்கிளை செலுத்தியது கண்டு

பிடிக்கப்பட்டது. மேலும் போதைப்பொருள்

உள்ளிட்ட எட்டு குற்றப்பதிவுகளையும்

அவ்வாடவர் கொண்டுள்ளார்.

குற்றவியல் பலாத்காரத்தை பயன்படுத்தி

அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல்

தடுத்ததாக குற்றவியல் சட்டத்தின பிரிவு

353ன் கீழ் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு

செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.