SELANGOR

காற்றின் தரக் கண்காணிப்பு நிலையங்களில் மிதமான காற்று மாசுக் குறியீடு அளவீடுகள் பதிவு

17 செப்டெம்பர் 2023, 12:19 PM
காற்றின் தரக் கண்காணிப்பு நிலையங்களில் மிதமான காற்று மாசுக் குறியீடு அளவீடுகள் பதிவு

கோலாலம்பூர், செப் 17: இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி, சுற்றுச்சூழல் துறையின் (DOE) மொத்தம் 58 காற்றின் தரக் கண்காணிப்பு நிலையங்களில் மிதமான காற்று மாசுக் குறியீடு அளவீடுகள் பதிவாகியுள்ளன.

சுற்றுச்சூழல் துறையால் இயக்கப்படும் காற்று மாசுபடுத்தும் குறியீட்டு மேலாண்மை அமைப்பின் (APIMS) இணையதளத்தில் உள்ள தரவுகளின் அடிப்படையில், செராஸில் காற்று மாசுக் குறியீட்டியின் அளவு அதிகபட்சமாக 96 ஆக இருந்தது. அதே சமயம் ஷா ஆலம் மற்றும் கூச்சிங் முறையே 91 மற்றும் 90 அளவீடுகளைப் பதிவு செய்துள்ளன.

0 முதல் 50 வரையிலான IPU அளவீடுகள் நல்லது, 51 முதல் 100 மிதமானது, 101 முதல் 200 ஆரோக்கியமற்றது, 201 முதல் 300 மிகவும் ஆரோக்கியமற்றது என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் 300 மற்றும் அதற்கு மேற்பட்டவை ஆபத்தானவை ஆகும்.

நாடு முழுவதும் உள்ள 68 காற்றின் தர கண்காணிப்பு நிலையங்களின் அடிப்படையில் ஒவ்வொரு மணி நேரமும் காற்று மாசுக் குறியீட்டின் அளவு வெளியிடப்படுகிறது.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.