SELANGOR

மழலையர் பள்ளிக்கான பதிவுக் கட்டண நிதியுதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

17 செப்டெம்பர் 2023, 7:11 AM
மழலையர் பள்ளிக்கான பதிவுக் கட்டண நிதியுதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஷா ஆலம், செப் 17: மழலையர் பள்ளி பதிவுக் கட்டண நிதியுதவிக்கான விண்ணம் (பிந்தாஸ் ) செப்டம்பர் 1ஆம் தேதி திறக்கப் பட்டதில் இருந்து இன்று வரை மொத்தம் 315 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

அவர்களில் 32 பேர் யாயாசன் வாரிசான் அனாக் சிலாங்கூர் (யவாஸ்) விதித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் தோல்வியடைந்ததாக கண்டறியப்பட்டதாக சமூக நலன் துறை பொறுப்பு உறுப்பினர் அன்வால் சாரி கூறினார்.

"இருப்பினும், விண்ணப்பங்கள் இன்னும் திறக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல், 5,000 பெறுநர்கள் இலக்கு ஒதுக்கீடு அடையும் வரை நாங்கள் இந்த விண்ணப்பத்தைத் திறந்திருப்போம்.

"RM5,001 முதல் RM8,000 வரை குடும்ப வருமானம் பெறும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மழலையர் பள்ளிக்கு அனுப்பும் சுமையை குறைக்க இந்த உதவிக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இந்த திட்டத்திற்குப் பதிவு செய்த 21 நாட்களுக்குள் சில ஆவணங்களைச்  http://pintas.yawas.com.my என்ற இணைப்பின் பதிவேற்றம் செய்வது மூலம் இவ்வுதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆவணங்கள் பின்வருமாறு பதிவேற்றப்பட வேண்டும்:

  • குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் நகல்

  • விண்ணப்பதாரரின் அடையாள அட்டையின் நகல்

  • வாக்காளர் பதிவேட்டின் நகல்

  • விண்ணப்பதாரர் மற்றும் மனைவியின் சமீபத்திய சம்பள அறிக்கையின் நகல்

  • வங்கி கணக்கின் நகல்

  • சட்டப்பூர்வத் தத்தெடுப்பு சான்றிதழின் நகல்

  • 2023யில் மழலையர் பள்ளி பதிவுக் கட்டணம் செலுத்திய ரசீட்டின் நகல்

சிலாங்கூர் பட்ஜெட் 2023ஐ சமர்ப்பித்தபோது, நான்கு மற்றும் அதற்குக் குறைவான வயது உடைய குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்குத் தங்கள் பிள்ளைகளை மழலையர் பள்ளியில் சேர்ப்பதற்காக ஒருமுறை RM100 வழங்கப்படும் என டத்தோ மந்திரி புசார் அறிவித்தார்.

நடுத்தர வருவாய் பிரிவினருக்கான (M40) ஆண்டு பதிவு ஊக்கத்தொகைக்காக RM500,000 ஒதுக்கப்பட்டதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.