SELANGOR

மலேசியா தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒற்றுமை நடைப்பயணம் ஏற்பாடு - பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி

15 செப்டெம்பர் 2023, 7:51 AM
மலேசியா தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒற்றுமை நடைப்பயணம் ஏற்பாடு - பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி

ஷா ஆலம், செப் 15: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி நாளை மலேசியா தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கிளானா ஜெயா நகர பூங்காவில் ஒற்றுமை நடைப் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.

பங்கேற்பு இலவசம் என்றும் பங்கேற்பாளர்கள் அவரவர் தங்கள் பாரம்பரிய ஆடைகளை அணிய ஊக்குவிக்கப் படுகிறார்கள் என்றும் முகநூல் மூலம் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி அறிவித்தது.

"ஆர்வமுள்ளவர்கள் நாளை காலை நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு அதாவது 7 மணிக்குள் நேரடியாக வந்து பதிவு செய்யலாம்.

மேலும் நாளை குழந்தைகளுக்கான ஆடை அலங்காரப் போட்டி, சமூக ஆடை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான கரோக்கே (OKU) உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான போட்டிகள் நடைபெறும்

அதுமட்டுமில்லாமல், மாற்றுத்திறனாளிகளுக்கான கால் மசாஜ், சுகாதார பரிசோதனை, நாட்டுப்புற விளையாட்டு மற்றும் சூப்பா டூப்பர் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

ஏதேனும் கேள்விகள் அல்லது கூடுதல் தகவல்களுக்கு 03-7956 0203/0206 என்ற எண்ணில் நிகழ்ச்சியின் செயலாளரைத் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.