SELANGOR

மாநிலப் பாரம்பரிய உணவாகச் “சாத்தே காஜாங்” தரம் உயர்த்தும் விழா

15 செப்டெம்பர் 2023, 7:28 AM
மாநிலப் பாரம்பரிய உணவாகச் “சாத்தே காஜாங்” தரம் உயர்த்தும் விழா

ஷா ஆலம், செப் 15: சிலாங்கூர் சாத்தே கண்காட்சியை முன்னிட்டு ‘சாத்தே காஜாங்ஙை ‘மாநிலப் பாரம்பரிய உணவாக தரம் உயர்த்தும் விழா அவாணி சிப்பாங் கோல்டு கோஸ்ட் ரிசார்ட்டில் நாளை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வை கலாச்சாரத் துறை பொறுப்பு உறுப்பினர் போர்ஹான் அமான் ஷா அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கவுள்ளார். மேலும், இதில் கிராமப்புற மேம்பாடு துறை பொறுப்பு உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயிலும் கலந்து கொள்வார்.

இக்கண்காட்சியில் மொத்தம் 10,000 பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பார்வையாளர்களுக்காக பல சுவாரஸ்யமான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில்,  ஆம்பெங் நாசியும் ஒரு பாரம்பரிய உணவாக அரசிதழில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.