SELANGOR

ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயா மற்றும் அம்பாங் ஆகிய இடங்களில் இலவச மருத்துவ பரிசோதனை

15 செப்டெம்பர் 2023, 2:50 AM
ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயா மற்றும் அம்பாங் ஆகிய இடங்களில் இலவச மருத்துவ பரிசோதனை

ஷா ஆலம், செப் 15: இன்று முதல் செப்டம்பர் 17 வரை ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயா மற்றும் அம்பாங் ஆகிய இடங்களில் சிலாங்கூர் அரசு ஏற்பாடு செய்துள்ள இலவச மருத்துவ பரிசோதனையில் பங்கேற்க சிலாங்கூர் மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.

இதில் பங்கேற்க பொதுமக்கள் லங்கா மாசோக் டெங்கான் செலாங்கா (SELangkah) விண்ணப்பம் அல்லது selangorsaring.selangkah.my இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

"இலவசச் சுகாதார பரிசோதனை சேவைகளைப் பெற பொதுமக்கள் சிலாங்கூர் மருத்துவ பரிசோதனை திட்டம் கட்டம் 3 யைப் பார்வையிட அழைக்கப் படுகிறார்கள்," என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று அகப்பக்கம் X இல் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உடல், இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்படும்.

இன்று சிலாங்கூர் சாரிங் திட்டம் மாநில அரசின் நிர்வாகக் கட்டிடமான ஜூப்லி பேராக் மண்டபத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

இதே நிகழ்ச்சியானது செப்டம்பர் 16 அன்று பெட்டாலிங் ஜெயா வின் மட்ரஸா அல்-இக்லாஸ் SS3/47 இல் காலை 8.30 முதல் மதியம் 12.30 வரை தொடரும். பின், செப்டம்பர் 17 அன்று அம்பாங்கில் உள்ள கம்போங் கோலா அம்பாங் எம்பி கேகே மண்டபத்தில் காலை 8 முதல் மதியம் 2.00 வரை நடைபெறும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.