SELANGOR

வணிகத்தை டிஜிட்டல் முறையில் மாற்ற விரும்பும் தொழில் முனைவோர் ஹிஜ்ரா நிதி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

15 செப்டெம்பர் 2023, 2:44 AM
வணிகத்தை டிஜிட்டல் முறையில் மாற்ற விரும்பும் தொழில் முனைவோர் ஹிஜ்ரா நிதி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், செப் 15: தங்கள் வணிகத்தை டிஜிட்டல் முறையில் மாற்ற விரும்பும் தொழில் முனைவோர் சிலாங்கூர் ஹிஜ்ரா அறக்கட்டளையின் (ஹிஜ்ரா) நிதித் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைக்கப் படுகிறார்கள்.

கோ டிஜிட்டல் திட்டம் RM50,000 வரை நிதியுதவி அளிக்கிறது. மேலும், mikrokredit.selangor.gov.my அல்லது ஹிஜ்ரா கிளையில் உள்ள அதிகாரிகளைத் தொடர்புகொள்வதன் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் முகநூலில் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

"கோ டிஜிட்டல் திட்டம், தொழில்முனைவோர் சமீபத்திய மற்றும் நவீன தளங்கள் மூலம் டிஜிட்டல் மயமாக்கலில் தங்கள் வணிக முறைகளை மாற்றுவதற்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது.

"இத்திட்டம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை சந்தைப்படுத்துவதற்கான திறனை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம், இணைய விற்பனையிலிருந்து லாபத்தை அதிகரிக்க முடியும். மேலும் தகவலுக்கு www.hijrahselangor.com ஐப் பார்வையிடவும்," என்று தெரிவிக்கப்பட்டது.

ஹிஜ்ரா கோ டிஜிட்டல் திட்டத்தை தவிர, ``Hijrah i-Bisnes``, ``Zero to Hero``, ``Niaga Darul Ehsan (NaDI)``, ``i-Agro, i-Lestari`` மற்றும் ``i-Bermusim`` ஆகிய திட்டங்களையும் வழங்குகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.