SELANGOR

கிள்ளான் கார் இல்லாத் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு

14 செப்டெம்பர் 2023, 9:13 AM
கிள்ளான் கார் இல்லாத் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், செப் 14: செப்டம்பர் 24 ஆம் தேதி காலை 7 மணிக்கு பாடாங் லாமான் செனி சஃபாரியில் நடைபெறும் கிள்ளான் கார் இல்லாத தின நிகழ்ச்சியைக் கண்டு மகிழுமாறு கிள்ளான் நகராட்சி பொது மக்களை அழைக்கிறது.

பாத்தேக் மற்றும் கெடா ஆடைகளை அணியும் கருப்பொருளைக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் 'ஃபன் வாக்', கேலரி கண்காட்சி, விளையாட்டு உபகரணங்கள் விற்பனை மற்றும் ஏரோபிக்ஸ் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

"மேலும், அதிர்ஷ்டக் குலுக்கும் நடைபெறும்" என்று எம்.பி.கே முகநூல் மூலம் தெரிவித்தது.

GM கிள்ளான், சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம், கிள்ளான் செலாத்தான் காவல்துறை மற்றும் சுல்தான் அப்துல் அஜிஸ் ராயல் கேலரி ஆகியவற்றுடன் இணைந்து எம்.பி.கே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.