SELANGOR

சிப்பாங் நகராண்மை கழகத்தில் வணிக உரிமங்களை புதுப்பிக்க வணிகர்கள் அழைக்கப் படுகிறார்கள்

14 செப்டெம்பர் 2023, 9:08 AM
சிப்பாங் நகராண்மை கழகத்தில் வணிக உரிமங்களை புதுப்பிக்க வணிகர்கள் அழைக்கப் படுகிறார்கள்

ஷா ஆலம், செப் 14: சிப்பாங் நகராண்மைக் கழகத்தின் கீழ் 2024 ஆண்டிற்கான  வணிக உரிமங்களை புதுப்பிப்பதற்கு விண்ணப்பங்கள் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை வரவேற்கப் படுகின்றன.

இதனை வர்த்தகர்கள் சிப்பாங் நகராண்மை கழக கவுண்டரிலோ அல்லது இணையம் வழியாக செய்யலாம் என்று உள்ளூர் அதிகாரசபை முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.

"வணிக உரிமங்களை புதுப்பிப்பதற்கு நோட்டீஸ்களை அக்டோபர் 1 முதல் ekl.mpsepang.gov.my அல்லது www.mpsepang.gov.my மூலம் செய்யலாம்.

வணிக உரிமங்களை புதுப்பிக்க தவறினால், அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று தெரிவிக்கப் பட்டது.

மேற்படி  தகவல் அல்லது கேள்விகளுக்கு உரிமத் துறையை 03-8319 0200 நீட்டிப்பு 256 / 255 / 262 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.