ஷா ஆலம், செப் 14: மாநில அரசு உருவாக்கிய சிலாங்கூர் பிளாட்ஃபார்மில் (பிளாட்ஸ்), சிறு வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் சேர்ந்து தங்கள் தயாரிப்பு சந்தையை விரிவுபடுத்தவும், வருவாயை அதிகரிக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிஜிட்டல் முறையானது வர்த்தகர்கள் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க உதவியது என்று டத்தின் ஶ்ரீ மஸ்டியானா முகமட் தெரிவித்தார்.
"கோவிட்-19 பரவிய காலத்தில் பிளாட்ஸ் உருவாக்கப்பட்டது. இப்போது 20,000க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் இதில் பதிவு செய்துள்ளனர்," என்று அவர் கூறினார்.
யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாராவில் ``Createpreneur`` தொழில் முனைவோர் திட்டத்தை துவக்கி வைத்து அவர் இவ்வாறு பேசினார். இதில் பெண்கள் மேம்பாட்டு துறை பொறுப்பு உறுப்பினரும் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் பிளாட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரு வருடம் கழித்து, ரமலான் மாதங்களுக்கு மட்டுமில்லாமல், வணிகர்கள் எல்லா நேரத்திலும் வருமானம் ஈட்ட உதவும் வகையில் பிளாட்ஸ் 2.0 தொடங்கப்பட்டது.
பெர்மோடாலான் நெகிரி சிலாங்கூர் பெர்ஹாட் (பிஎன்எஸ்பி) மற்றும் ராக்கான் டிஜிட்டல் சிலாங்கூர் (ஆர்டிஎஸ்) ஆகியவற்றின் ஒத்துழைப்பை உள்ளடக்கிய பிளாட்ஸ் மெய்நிகர் தொடர் 3.0 கடந்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கப் பட்டது.








