ஷா ஆலம், செப் 14: இவ்வாண்டு செப்டம்பர் 1 முதல் 30 வரை திறந்திருக்கும் ``Boleh Ubah Dalam Negara`` கடன் உதவியின் இரண்டாவது அமர்வுக்கு விண்ணப்பிக்க சிலாங்கூர் மாணவர்கள் அழைக்கப் படுகிறார்கள்.
இந்த கல்வி கடன் உதவிக்குச் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள அரசு, பொது மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து துறைகளிலும் சான்றிதழ், டிப்ளோமா மற்றும் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.
மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தால் danapendidikan.selangor.gov.my
டிப்ளமோ (RM8,000), பல்வேறு மற்றும் கால்நடை இளங்கலைப் பட்டங்கள் (RM10,000), மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இளங்கலைப் பட்டங்கள் (RM12,000) ஆகியவற்றைத் தொடர்ந்து சான்றிதழுக்காக RM4,000 வருடாந்திர நிதியுதவியாக இந்த சிறப்புக் கல்வி கடன் உதவி வழங்குகிறது.
விண்ணப்பதாரரின் தாய் அல்லது தந்தை சிலாங்கூரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பதோடு, குடும்ப வருமானம் RM20,000க்கு மேல் போகாமல் இருப்பதும் தகுதித் தேவைகளில் அடங்கும்.
கடந்த ஆண்டு, மாநில அரசு சிலாங்கூரில் உள்ள மாணவர்கள் உயர் கல்வியை தொடர உதவும் வகையில் இந்த கடன் உதவிக்கு RM 9 மில்லியனை ஒதுக்கியது.








