ஷா ஆலம், செப் 14: நேற்று இரவு ஹில்டனில் உள்ள டபுள் ட்ரீயில் நடைபெற்ற யாயாசன் யுனிவர்சிட்டி சிலாங்கூர் (யூசெல்) விருந்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டார்.
அவரின் வருகையை டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் யூனிசெல் துணைவேந்தர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமட் ரெட்சுவான் ஓத்மான் ஆகியோர் வரவேற்றனர்.
அந் நிகழ்வுக்குப் பிரதமருடன் செப்டம்பர் 9 அன்று யுனிசெல் கேம்பஸ் பெஸ்டரி ஜெயாவின் வேந்தர் மண்டபத்தில் நடைபெற்ற 17வது பட்டமளிப்பு விழாவில்,அரசியல் மற்றும் சமூக அறிவியலில் தத்துவத்திற்கான கெளரவ முனைவர் பட்டத்தைப் பெற்ற அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும் வருகை புரிந்திருந்தார்.
இந்நிகழ்வில் சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.
அரசு நிதியுதவி பெறும் பல்கலைக் கழகமான யுனிசெல், கடந்த பிப்ரவரியில் பிரதமரால் பார்வையிடப்பட்ட முதல் உள்ளூர் உயர் கல்வி நிறுவனமாக (IPT) ஆனது.
மலேசியாவின் எதிர்கால நல்வாழ்வுக்கான கல்வி சீர்திருத்தம் என்ற தலைப்பில் உரையை வழங்கினார். மேலும் மாணவர்களுக்கு உதவுவதற்காக நிறுவப்பட்ட சித்திக் ஃபட்சில் மற்றும் யூசெல் நினைவு நூலகத்தைத் திறந்து வைத்தார்.








