ஷா ஆலம், செப் 14- செலாயாங் நாடாளுமன்றம் மற்றம் ரவாங்
சட்டமன்ற உறுப்பினரின் ஏற்பாட்டில் நடைபெறும் இரத்த தான முகாம்
மற்றும் மருத்துவப் பரிசோதனையில் பங்கேற்குமாறு பொது மக்கள்
கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வு ரவாங் ஏயோன் பேரங்காடியில் வரும் சனி மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என்று ரவாங் சட்டமன்ற உறுப்பினர்
சுவா வேய் கியாட் கூறினார்.
காலை 10.00 மணி தொடங்கி மாலை 5.00 மணி வரை நடைபெறும் இந்த
மருத்துவப் பரிசோதனையில் கலந்து பயன்பெறும் அதேவேளையில்
பிறருக்கு பயன் தரும் வகையில் இரத்த தானமும் செய்யும்படி அவர்
வட்டார மக்களை கேட்டுக் கொண்டார்.
ஆரோக்கியமான நிலையில் உள்ளவர்கள் இரத்த தானம் செய்வது சிறந்த
ஒரு நடவடிக்கையாக விளங்குகிறது. அதே சமயம், இரத்த தானம்
செய்வதால் மன நலத்திற்கும் மிகுந்த பலன் கிட்டுகிறது என அவர்
தெரிவித்தார்.
இரத்த தானம் செய்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைத்து,
மனோரீதியான ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும். அதோடு
மட்டுமின்றி எதிர்மறையான உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும் சமூக
நெருக்கத்தை அதிகரிக்கவும் இயலும் என்றார் அவர்.
இந்த மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான இயக்கம் தொடர்பில் மேல்
விபரங்கள் பெற விரும்புவோர் 016-2014138 (இளங்கோ) மற்றும் 019-2511283
(சிவா) ஆகியோரத் தொடர்பு கொள்ளலாம்.








