SELANGOR

தொழில் முனைவோர் மற்றும் வணிக உரிமையாளர்கள் அக்டோபரில் நடைபெறவுள்ள சிலாங்கூர் தொழில் முனைவோர் எக்ஸ்போ 2023 இல் பங்கேற்க அழைப்பு

13 செப்டெம்பர் 2023, 9:15 AM
தொழில் முனைவோர் மற்றும் வணிக உரிமையாளர்கள் அக்டோபரில் நடைபெறவுள்ள சிலாங்கூர் தொழில் முனைவோர் எக்ஸ்போ 2023 இல் பங்கேற்க அழைப்பு

ஷா ஆலம், செப் 13: தொழில் முனைவோர் மற்றும் வணிக உரிமையாளர்கள் அக்டோபரில் நடைபெறவுள்ள சிலாங்கூர் தொழில் முனைவோர் எக்ஸ்போ 2023 (Selbiz 2023) இல் பங்கேற்குமாறு டத்தோ மந்திரி புசார் அழைப்பு விடுத்தார்.

அக்டோபர் 6 முதல் மூன்று நாள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் விற்பனையாளராக பங்கேற்பதன் மூலம் தொழில்முனைவோர் மற்றும் வணிக உரிமையாளர்கள் தங்கள் வணிகத்தை உயர் மட்டத்திற்கு விரிவுபடுத்த வாய்ப்பளிப்பதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

"இனி காத்திருக்க வேண்டாம், www.selbiz.my என்ற இணைப்பில் பதிவு செய்யவும்.

சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகத்தின் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பிரிவால் முகநூலில் பதிவேற்றப்பட்ட ஒரு சிறிய வீடியோ கிளிப் மூலம், "செல்பிஸ் வழி 2023 இல்  வாய்ப்புகள், நெட்வொர்க்  வழங்கும் நன்மைகளை   ஆராயுங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு, பானங்கள், ஃபேஷன், சில்லறை விற்பனை, சேவைகள், அழகுசாதனப் பொருட்கள், தொழில்நுட்பம், பயன்படுத்திய ஆடைகள், மற்றும் குழந்தைகளுக்கான பொருட்கள் ஆகியவற்றில் தொழில்முனைவோருக்கு 200 இடங்களை இந்த ஆண்டு நிகழ்வில் வழங்கப்படவுள்ளது.

15,000 பார்வையாளர்களின் வருகையை இலக்காகக் கொண்டு, சிலாங்கூர் தொழில் முனைவோர் எக்ஸ்போவில் காஃபி கண்காட்சி, அதிர்ஷ்டக் குலுக்கு மற்றும் செல்பிஸ் ரன் 2023 உள்ளிட்ட பல்வேறு சுவாரசியமான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரபல கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை மகிழ்விக்கும்.

எக்ஸ்போ தொடர்பான ஏதேனும் கேள்விகள் அல்லது கூடுதல் தகவலுக்கு, 017-419 9400 என்ற எண்ணில் இஸ்ஸாதி நாடியாவைத் தொடர்பு கொள்ளவும் அல்லது 011-2858 3903 என்ற எண்ணில் நோர் சப்ரினாவைத் தொடர்பு கொள்ளவும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.