SELANGOR

இலவச மருத்துவ பரிசோதனை திட்டம் மூன்று இடங்களில் தொடரும்

13 செப்டெம்பர் 2023, 4:49 AM
இலவச மருத்துவ பரிசோதனை திட்டம் மூன்று இடங்களில் தொடரும்

ஷா ஆலம், செப் 13: கடந்த ஆண்டு சிலாங்கூர் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டம் இந்த வாரம்  மீண்டும் தொடங்கும், இவ்வாரம் மூன்று இடங்களில் தொடரும் என்று சுகாதார துறை பொறுப்பு  ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் முதலில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) சுல்தான் சலாவுடின் அப்துல் அஜீஸ் ஷா கட்டிடத்தில் உள்ள ஜூப்லி பேராக் ஹாலில், நடைபெற உள்ளது என ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

அதே நிகழ்ச்சி செப்டம்பர் 16 அன்று பெட்டாலிங் ஜெயாவின் மட்ரஸா அல்-இக்லாஸ் SS3/47 இல் நடைபெற உள்ளதாகவும், மறுநாள் அம்பாங்கில் உள்ள எம்பிகேஜே கம்போங் கோலா அம்பாங் ஹாலில் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

" இந்நிகழ்வில் இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மட்டுமே மேற்கொள்ளப்படும். இந்த இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டம் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், மறுநாள் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையில் நடைபெறும்.

"மேலும், இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும்" என்று அவர் கூறினார்,

பங்கேற்பாளர்கள் அதிக நன்மைகளைப் பெறுவதை உறுதிசெய்ய அடுத்த ஆண்டு இத்திட்டத்தில் சில மேம்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

சிலாங்கூர் சாரிங் குடியிருப்பாளர்களுக்கு நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டம் பிசியோதெரபி அமர்வுகளை நடத்துவதோடு பல் மற்றும் காது பரிசோதனைகள் உட்பட பல பரிசோதனை சேவைகள் வழங்கப்பட்டதன் மூலம் இந்த ஆண்டு மேம்படுத்தப்பட்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.