SELANGOR

சாலை விதி மீறல் குற்றங்களுக்குக் கிள்ளான் மாநகராட்சி எந்த தரப்பினருடனும் சமரசம் செய்து கொள்ளாது

13 செப்டெம்பர் 2023, 3:37 AM
சாலை விதி மீறல் குற்றங்களுக்குக் கிள்ளான் மாநகராட்சி எந்த தரப்பினருடனும் சமரசம் செய்து கொள்ளாது

ஷா ஆலம், செப் 13: முறையான வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்தாதது போன்ற சாலை சம்பந்தப்பட்ட  விதிமீறல்  குற்றங்களுக்குக் கிள்ளான் மாநகராட்சி (எம்.பி.கே) எந்த தரப்பினருடனும் சமரசம் செய்து கொள்ளாது.

மக்கள் தங்கள் கார்களை கண்ட இடங்களில் நிறுத்துவதற்கு பல காரணிகள் உள்ளன என கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் இயக்குனர் நோர்பிசா மஹ்ஃபிஸ் கூறினார்.

" குறிப்பாக வணிக பகுதிகளில் அலுவலக நேரத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் பார்க்கிங் கூப்பன்களை செலுத்த விரும்பாததாலும் மக்கள் தங்கள் கார்களை ஆங்காங்கே நிறுத்துவதற்கு காரணங்களாக உள்ளன.

“குறிப்பிட்ட ஸ்டிக்கர் இல்லாமல் ஊனமுற்றோர் நிறுத்துமிடத்தில் தங்கள் வாகனத்தை நிறுத்தும் எந்த ஒரு தனி நபருடன் கிள்ளான் மாநகராட்சி சமரசம் செய்து கொள்ளாது,” என்று நோர்பிசா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பண்டார் பாரு கிள்ளான் மற்றும் கிள்ளான் செலாத்தான் போன்ற வணிகப் பகுதிகள் கிள்ளான் மாநகராட்சி மேற்கொள்ளும் வாகன இழுவை நடவடிக்கைக்கு இலக்காகும் பகுதிகளாகும்.

"அவை ஜாலான் மொஹெட்/ஜாலான் தாலி ஆயர், ஜாலான் ஸ்டெசன்/ஜாலான் ஸ்டேஷன் 1, ஜாலான் ராயா திமோர், ஜாலான் டத்தோக் ஹம்சா மற்றும் ஜாலான் தெங்கு   கிளானா ஆகிய இடங்கள் ஆகும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.