SELANGOR

கத்ரி நெடுஞ்சாலையில் டிரெய்லர் கவிழ்ந்தது- ஓட்டுநர் படுகாயம்

13 செப்டெம்பர் 2023, 3:25 AM
கத்ரி நெடுஞ்சாலையில் டிரெய்லர் கவிழ்ந்தது- ஓட்டுநர் படுகாயம்

ஷா ஆலம், செப் 13- டிரெய்லர் லோரி

கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் அதன்

ஓட்டுநர் படுகாயங்களுக்குள்ளானார்.

இச்சம்பவம் கத்ரி நெடுஞ்சாலையின் டோல்

சாவடி அருகே நேற்று மாலை நிகழ்ந்தது.

இந்த விபத்து தொடர்பில் தங்களுக்கு மாலை

5.42 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக

சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்

துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி

இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார்

கூறினார்.

ரவாங் தீயணைப்பு மற்றும் மீட்பு

நிலையத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொண்ட குழு

இரண்டு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு

விரைந்தனர்.

மாலை 5.52 மணிக்கு இடத்தை அடைந்த

போது, கொள்கலன்களை ஏற்றிய ஸ்கேனியா

வகை டிரெய்லர் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்த

நிலையில் காணப்பட்டது என்று அவர்

தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பு 39

வயதான டிரெய்லர் ஓட்டுநரை லோரியின்

இடிபாடுகளிலிருந்து மீட்டனர். கடுமையான

காயங்களுக்குள்ளான அந்ந ஓட்டுநர்

சிகிச்சைக்காக மருத்துவப் பணியாளர்களிடம்

ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.