SELANGOR

சிலாங்கூர் சாத்தே கண்காட்சியில் 10,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

12 செப்டெம்பர் 2023, 8:21 AM
சிலாங்கூர் சாத்தே கண்காட்சியில் 10,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஷா ஆலம், செப் 12: செப்டம்பர் 16 அன்று சிப்பாங் பாகன் லாலாங் கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிலாங்கூர் சாத்தே கண்காட்சியில் மொத்தம் 10,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வருகையாளர்களுக்கு 100,000 சாத்தேகள் இலவச வழங்கப்படுதல் உட்பட பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் நடத்தப்படவுள்ளன என மேம்பாட்டு துறை பொறுப்பு உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயில்  கூறினார்.

"இம்முறை சிலாங்கூர் முழுவதிலும் இருந்து மொத்தம் 10 சாத்தே விற்பனையாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்பார்கள்" என்று அவர் கூறினார்.

இதில் கலைஞர்கள் நிகழ்ச்சிகள், விற்பனைக் கூடங்கள், கண்காட்சிகள், அதிர்ஷ்டக் குலுக்குகள், ஆடைப் போட்டிகள் மற்றும் குறும்பட வீடியோ போன்ற நிகழ்ச்சிகளும் அடங்கும் என்று ரிசாம் கூறினார்.

"இந்த கண்காட்சியை சிலாங்கூரில் அதிக பிரபலமான உணவான சாத்தேவை ஊக்குவிப்பதற்கு ஆகும்.

"இந்த கண்காட்சி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து சிலாங்கூருக்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளுக்கு சாத்தேவை அறிமுகப்படுத்த உதவும்," என்று அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.