SELANGOR

விபத்தில் சிக்கிய சிலாங்கூர் மாநில விளையாட்டு கவுன்சிலின் (எம்எஸ்என்) பொறியாளருக்கு RM5,000 உதவி வழங்கப்பட்டது

12 செப்டெம்பர் 2023, 5:27 AM
விபத்தில் சிக்கிய சிலாங்கூர் மாநில விளையாட்டு கவுன்சிலின் (எம்எஸ்என்) பொறியாளருக்கு RM5,000 உதவி வழங்கப்பட்டது

கிள்ளான்,  செப் 11: கடந்த ஜூன் மாதம் சாலை விபத்தில் சிக்கிய சிலாங்கூர் மாநில விளையாட்டு கவுன்சிலின் (எம்எஸ்என்) பொறியாளர் முகமட் நூர் ஃபரித் சக்பாவின் குடும்பத்திற்கு மாநில அரசு RM5,000 உதவி வழங்கியுள்ளது.

இந்த ஒரு முறை பண உதவி முகமது நூர் ஃபரித்தின் குடும்பச் சுமையைக் குறைக்கும் என்று நம்புவதாக விளையாட்டு துறை பொறுப்பு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

"எம்எஸ்என் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் உறுப்பினர்களின் நலனையும் நாங்கள் கவனிப்போம்," என்று முகமட் நூர் ஃபரித்தைப் பார்வையிட்ட பிறகு அவர் கூறினார்.

மறுவாழ்வு சிகிச்சையின் மூலம் முகமட் நூர் ஃபரித் சிறந்த சிகிச்சையைப் பெறுவதையும் அவரது தரப்பு உறுதி செய்யும் என நஜ்வான் தெரிவித்தார்.

" முகமட் நூர் ஃபரித்தின் சிகிச்சை செயல்முறையை எளிதாக்குவதற்குப் பிசியோதெரபி நடவடிக்கையை மேற்கொள்ள உதவும் ஒரு வசதி எங்களிடம் உள்ளது.

"அரசும் சொக்சோவுடன் இணைந்து அவரை மலாக்காவில் உள்ள மறுவாழ்வு சிகிச்சைக்கு அனுப்புவதற்கான திட்டத்தை வகுத்து வருகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.

ஜூன் 17 அன்று நூர் ஃபரித் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் வழியில் விபத்துக்குள்ளாகி தலை மற்றும் நரம்புகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.