SELANGOR

சாத்தே காஜாங் சிலாங்கூர் பாரம்பரிய உணவாக அரசிதழில் வெளியிடப்படும்

12 செப்டெம்பர் 2023, 5:00 AM
சாத்தே காஜாங் சிலாங்கூர் பாரம்பரிய உணவாக அரசிதழில் வெளியிடப்படும்

ஷா ஆலம், செப் 12: நாசி அம்பேங்கைத் தவிர, மற்றொரு பிரபலமான உணவான சாத்தே காஜாங் சிலாங்கூரின் பாரம்பரிய உணவாக அரசிதழில் வெளியிடப்படும் என்று கிராம மேம்பாட்டு துறை பொறுப்பு உறுப்பினர் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில மலாய் மரபுகள் மற்றும் பாரம்பரியக் கழகம் (படாட்) மூலம் இந்த அறிவிப்பு விரைவில் செயல்படுத்தப்படும் என்று டத்தோ ரிசாம் இஸ்மாயில் விளக்கினார்.

"காஜாங் சாத்தே அடையாள உணவுகளில் ஒன்றாக மாநில அரசு அங்கீகரித்துள்ளது. இது எதிர்காலத்தில் பாரம்பரிய உணவாக அரசிதழில் வெளியிடப்படும்" என்று அவர் நேற்று தெரிவித்தார்.

மேலும், செப்டம்பர் 16 ஆம் தேதி சிப்பாங்களில் உள்ள பகான் லாலாங் கடற்கரையில் சிலாங்கூர் சாத்தே கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.