SELANGOR

விரும்பும் உணவகத்திற்கு வாக்களித்து ரொக்கப் பரிசை வெல்ல பொதுமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு - ஷா ஆலம் மாநகராட்சி

11 செப்டெம்பர் 2023, 8:23 AM
விரும்பும் உணவகத்திற்கு வாக்களித்து ரொக்கப் பரிசை வெல்ல பொதுமக்களுக்கு ஓர்  அரிய வாய்ப்பு - ஷா ஆலம் மாநகராட்சி

ஷா ஆலம், செப் 11: ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) அதன் நகரத்தின் குடிமக்களை

அவர்கள் விரும்பும் உணவகத்திற்கு வாக்களிக்கவும் மற்றும் அதிர்ஷ்டக் குலுக்கில்

(RM1,000) பங்கேற்று பணத்தை வெல்லும் வாய்ப்பைப் பெறவும் அழைக்கிறது.

பிரபலமான உணவகங்களின் தூய்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு பற்றிய

தகவல்களைப் பெறுவதற்காக உள்ளூர் அதிகாரசபையானது சுவாரா ஷா ஆலம்

கணக்கெடுப்பு பிரச்சாரத்தைச் செயல்படுத்தியது. .

சுவாரா ஷா ஆலம் கணக்கெடுப்பு பிரச்சாரத்தில் பங்கேற்கும் 10 அதிர்ஷ்டசாலிகளுக்கு RM 100 ரொக்கப் பரிசை வெல்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால், நீங்கள் விரும்பும் உணவகத்திற்கு வாக்களித்து அந்த  வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

வாக்களிக்க https://bit.ly/SSApopularvsbersih என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்

என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது. இந்த பிரச்சாரம் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர்

16 வரை மேற்கொள்ளப்படும்.

பிரச்சாரத்தில் இடம் பெற்றுள்ள உணவகங்கள் அனைத்தும் ஷா ஆலம் மாநகராட்சியின் நிபந்தனைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன, என்று தெரிவிக்கப்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.