SELANGOR

இரு வெள்ள நீர் சேகரிப்புக் குளங்களை ஆய்வு செய்ய வடிகால், நீர்பாசனத் துறைக்கு எம்.பி.எஸ்.ஏ. கோரிக்கை

11 செப்டெம்பர் 2023, 8:14 AM
இரு வெள்ள நீர் சேகரிப்புக் குளங்களை ஆய்வு செய்ய வடிகால், நீர்பாசனத் துறைக்கு எம்.பி.எஸ்.ஏ. கோரிக்கை

ஷா ஆலம், செப் 11- வெள்ளத்தைத் தடுப்பதற்கு ஏதுவாக தனது

கட்டுப்பாடில் உள்ள இரு வெள்ள நீர் சேகரிப்பு ஆய்வு செய்யும்படி

சிலாங்கூர் மாநில வடிகால் மற்றும் நீர்பாசனத் துறையை ஷா ஆலம்

மாநகர் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டில் தாமான் சவுஜானா இண்டா மற்றும் ஆரா

டாமன்சாராவில் நிர்மாணிக்கப்பட்ட அவ்விரு குளங்களும் கடுமையான

மழையின் போது வெள்ள நீரை சேகரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளனவா

என்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது என்று ஷா ஆலம் துணை

டத்தோ பண்டார் செரேமி தர்மான் கூறினார்.

கடுமையாக மழை பெய்யும் போது இவ்விரு குளங்களும் நாம்

எதிர்பார்த்தபடி செயல்படுகிறதா என்பதையும் மழை நீர் இக்குளங்களைச்

சென்று சேர்கிறதா என்பதையும் உறுதி செய்வதில் வடிகால் மற்றும் நீர்

பாசனத்துறையின் ஒத்துழைப்பு எங்களுக்குத் தேவைப்படுகிறது என்று

அவர் சொன்னார்.

உபரி நீர் வடிகால்கள் வழியாக வழிந்தோடுவதை தடுக்கு வகையில் நீரை

சேகரிக்கும் ஆற்றலை அந்த குளங்கள் கொண்டிருக்க வேண்டும்.

உதாரணத்திற்குக்கோத்தா டாமன்சாராவில் பெய்யும் மழை நீரை

அக்குளங்களைச் சென்று சேர வேண்டும் என்றார் அவர்.

நேற்று இங்கு ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற

வாகனமில்லா தின கொண்டாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் அவர்

இவ்வாறு கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.